இடுகைகள்

அவமானமே மூலதனம்

மன்னரின் அரசவை… ஒருவர் தான் ஆரம்பிக்க இருக்கும் கல்லூரிக்கு நிதி கேட்டு வருகிறார்.  அந்த மன்னர் இந்து என்றாலே கோபப்படுபவர்.  "நிதி தானே.. இந்தா" என தன் காலில் இருந்த ஷூவை வந்தவர் மேல் வீசி எறிந்தார். எதிர்பாராத நிகழ்வால் நிலைகுலைந்தாலும்..ஒருபக்கம் அவமானம்..மனதை கஷ்டப்படுத்தியது.  இருந்தாலும் ஒரு நல்ல விஷயத்துக்காகத் தானே அவமானப்படுகிறோம் என  தேற்றிக்கொண்டு மன்னருக்கு நன்றி சொல்லி கிளம்பினார். மன்னருக்கு ஒன்றும் புரியவில்லை.  என்னடா நாம் அவமானப்படுத்த ஷூவை வீசினோம் நன்றி சொல்லி செல்கிறானே என. ஒருவரை எப்படி அவமானப்படுத்த முயன்றாலும்..எதிரிலிருப்பவர் தன் நோக்கத்தில் உறுதியாய் இருந்தால் என்ன செய்ய முடியும்?  மேலும் தன்மேல் நம்பிககையில்லாதவர்கள் தான் அவமானமாய் உணர்ந்து எமோஷன் ஆவார்கள். வெளியில் ஒரே சத்தம்.. அமைச்சரை அழைத்த மன்னர் என்ன அங்கே?.. என்றார். நீங்கள்  எறிந்த ஷூவை ஏலம் போடுகிறான் மன்னா.. கல்லூரி கட்ட மன்னர் தந்த ஷூ.. என்றே கூவுகிறான் என்றார். எவ்வளவு போகிறது…  என்றார் மன்னர்.  படு கேவலமாய் பத்து நாணயத்துக்கு மேல் ஏலம் போகவில்லை என்ற...

இயற்கை உரம் - மண்ணுளி பாம்பு

படம்
மண்ணுளி பாம்பு நம்மை நக்கினால் அல்லது கடித்தால் நமக்கு கை, காலில் குஷ்டம் நோய் வரும் என கிராம மக்களால் நம்பப்பட்டு வந்தது. இது உண்மை அல்ல. இப்படி ஒரு பயம் இருந்தால் தான் நமது மக்கள் அந்த பாம்பினை தொட மாட்டார்கள் என்பதற்காக நமது முன்னோர்கள் காரணத்துடன் சொல்லி வைத்த பொய்யாகும். SANDBOA என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மண்ணுளி பாம்புகள் தற்போது இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் மட்டுமே வாழும் சூழ்நிலை உடையன. அது பாம்பே அல்ல, அது மண்புழு குடும்பத்தை சேர்ந்த ஒரு பெரிய அளவிலான புழு மட்டுமே. மண்ணில் வாழும் இது பாம்பு அல்ல என்கிறது அறிவியல். எனவே இதனை மண்ணுளி புழு என்றே அழைப்போம். இந்த மண்ணுளி மிகுந்த கூச்ச சுபாவம் மற்றும் பயந்த சுபாவம் கொண்டதாகும். இந்த பாம்பினால் மரணம் நிகழ்ந்ததாக இதுவரை எந்த பதிவும் இல்லை. திடீரென இந்த பாம்புகளை லட்சக் கணக்கில் விலை கொடுத்து வாங்கும் அளவுக்கு என்ன அவசியம் வந்தது? இந்தக் கேள்விக்கான பதில் எங்கும் கிடைக்காது. ஏனெனில் இதற்கான உண்மையான பதில் திட்டமிட்டு மறைக்கப்படுகிறது என்பது தான் உண்மை. மண்ணுளியின் உடம்பில் உள்ள வெள்ளை அணுக்கள் மனிதர்களின்...

விபத்து காப்பீடு

நண்பர் ஒருவரின் காப்பீடு பற்றிய பதிவு.. எனது தங்கை சாலைவிபத்தில் உயிரிழந்து ஒருவருடம் ஆகிவிட்டது... அந்த விபத்து சம்மந்தப்பட்ட வழக்குகள், மற்றும் காப்பீடுகள் சம்மந்தப்பட்ட விசயங்களை நான்தான் Follow செய்து கொண்டு இருக்கிறேன். முதலில் வாரிசு சான்றிதழ் வாங்க திருப்பூருக்கும் பல்லடத்திற்க்கும் நான் அலைந்த அலைச்சல் சொல்லிமாளாது.. ஒருவழியாக வாரிசு சான்றிதழை வாங்கி சம்மந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்திற்கும், வழக்கு நடத்தும் வக்கீலிடமும் கொடுத்துவிட்டேன். அப்படியே முதலமைச்சர் நிவாரணநிதிக்கும் விண்ணப்பித்தாகிவிட்டது... இதற்கு முன்பாக, என் தங்கை இறந்த ஒருமாதம் கழித்து, அவள் வங்கி க் கணக்கு வைத்திருக்கும் கனராவங்கி சென்று மாதம் ஒரு ரூபாய் பிடித்தம் செய்யும் மத்திய அரசின் பிரதம மந்திரி விபத்து காப்பீட்டில் இணைந்து இருக்கிறதா? என்று வங்கி மேலாளரை சந்தித்து கேட்டேன். அந்த தொகையை பிடித்தம் செய்யவில்லை. அதனால் அந்த ஸ்கீம் உங்கள் தங்கையின் வங்கிக்கணக்கில் இல்லை என்று கூறி முடித்துக்கொண்டார். கஷ்ட்டப்படும் தங்கை குடும்பத்திற்க்கு என்னால் பணம் காசு கொடுத்து உதவ முடியாட்டாலும், இதுபோன்ற விசயங்களை நான் விட...

கண்ணீரை உரமாக போட்டால் காதல் வளருமோ..?

நீ இருந்த நாட்களில் தான் இறந்து போன என் இதயம் உயிர்ப்பித்தது ... வானவில்லில் என்றுமே மாறாத நிறவரிசையைப் போல தான் என் இதயத்திலும்,  உன்னைப் பற்றிய ஞாபக வரிசை மாறாமல் அப்படியே நின்று கொண்டு இருக்கிறது ... உன் ஞாபகத்தில் வாடுபவள் அல்ல நான்... அதில் இருந்தே துளிர்ப்பவள் ... உன் மீது நான் கொண்ட காதல், நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறதே  எதனால்? ஒருவேளை நான் அதற்கு கண்ணீரை உரமாக போடுவதனால் தானோ ... .  நட்புடன் உங்கள் தோழி... 

படித்ததில் பிடித்த காதல் கவிதை

என் கண்களை அழகாக்கி சென்றாய் அதில் உன் பிம்பத்தைக் காட்டி... என் இதயத்தை கணமாக்கி சென்றாய் அதில் உன் நினைவுகளை ஏற்றி... என் கைவிரல்களின் இடைவெளிகளை இன்று இல்லாமல் ஆக்கினாய்,  அதில் உன் கைவிரல்களை கோர்த்து... என் நாணமறியா முகத்தில் வெட்கத்தின் சின்னமாய் சிவப்பை பூசி சென்றாய்,  உன் பார்வையைக் கொண்டு... . . . நட்புடன் உங்கள் தோழி.....