இடுகைகள்

ஆகஸ்ட், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கண்ணீரை உரமாக போட்டால் காதல் வளருமோ..?

நீ இருந்த நாட்களில் தான் இறந்து போன என் இதயம் உயிர்ப்பித்தது ... வானவில்லில் என்றுமே மாறாத நிறவரிசையைப் போல தான் என் இதயத்திலும்,  உன்னைப் பற்றிய ஞாபக வரிசை மாறாமல் அப்படியே நின்று கொண்டு இருக்கிறது ... உன் ஞாபகத்தில் வாடுபவள் அல்ல நான்... அதில் இருந்தே துளிர்ப்பவள் ... உன் மீது நான் கொண்ட காதல், நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறதே  எதனால்? ஒருவேளை நான் அதற்கு கண்ணீரை உரமாக போடுவதனால் தானோ ... .  நட்புடன் உங்கள் தோழி... 

படித்ததில் பிடித்த காதல் கவிதை

என் கண்களை அழகாக்கி சென்றாய் அதில் உன் பிம்பத்தைக் காட்டி... என் இதயத்தை கணமாக்கி சென்றாய் அதில் உன் நினைவுகளை ஏற்றி... என் கைவிரல்களின் இடைவெளிகளை இன்று இல்லாமல் ஆக்கினாய்,  அதில் உன் கைவிரல்களை கோர்த்து... என் நாணமறியா முகத்தில் வெட்கத்தின் சின்னமாய் சிவப்பை பூசி சென்றாய்,  உன் பார்வையைக் கொண்டு... . . . நட்புடன் உங்கள் தோழி.....